`இவ்வளவு சீரியஸாகும்னு தெரியல!’ - கிரிக்கெட் பெட்டில் தோற்று இறந்ததாக நாடகமாடிய இளைஞர் கண்ணீர் #IndvsBanSponsoredநிதாஹஸ் கோப்பை டி20 தொடர் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றிபெறும் என பெட் கட்டி தோற்ற இளைஞர், இறந்ததாக நாடகமாடிய சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது. 

இலங்கையில் நடந்த நிதாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 தொடர் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பரபரப்பான இறுதிப் போட்டியின் கடைசிப் பந்தை சிக்ஸருக்கு விளாசி தினேஷ் கார்த்திக் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்தப் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறும் என அந்நாட்டைச் சேர்ந்த அடெல் சிக்டர் (Adel Shikder) என்ற இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் 1,800 டாலர்கள் பெட் கட்டியுள்ளார். ஆனால், வங்கதேச அணி அந்தப் போட்டியில் தோற்றது. இதனால், பெட் கட்டியவரை ஏமாற்றுவதற்காக, இறந்துவிட்டதாக அவர் நாடகமாடியது தெரியவந்தது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை அவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். 

Sponsored


அந்த வீடியோவில் 2 பேர் சேர்ந்து சிக்டரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிவப்பு நிற பழரசத்தை ரத்தத்திற்குப் பதிலாக அவர் பயன்படுத்தியது, இதற்காக வீடியோகிராஃபர் ஒருவரை பணம் கொடுத்து சிக்டர் பணிக்கு அமர்த்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பான புகாரில் வங்கதேச போலீஸார் சிக்டரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தகவலை டாக்கா நகரக் காவல்துறை தலைவர் கம்ருஜமான் சர்தார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இறந்ததாக நாடகமாடிய பின்னர், தனது சகோதரரைப் போனில் தொடர்பு கொண்டு குரலை மாற்றிப் பேசிய சிக்டர், உடல் சிட்டகாங் பகுதியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸில் அவரது குடும்பம் புகார் அளிக்கவே, விசாரணையில் இந்த நாடகம் அம்பலமாகியிருக்கிறது. வங்கதேசத்தில் கிரிக்கெட் பெட்டிங் சட்டவிரோதமாகும். இருப்பினும், அண்மைகாலங்களில் கிரிக்கெட் பெட்டிங் அங்கு அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஊடகங்களில் முன்னிலையில் நிறுத்தப்பட்ட சிக்டர், ‘இறந்ததாக நாடகமாடியதால், பெட் கட்டியவர் என்னிடம் பணம் வாங்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், அந்த வீடியோ இவ்வளவு சீரியஸாகும்னு நினைக்கவில்லை’ என்றார்.      

Sponsored
Trending Articles

Sponsored