நிறைமாத கர்ப்பிணியின் பிரமிக்கவைக்கும் 'போல் டான்ஸிங்'! # ViralSponsoredநிறைமாத கர்ப்பிணி ஒருவர், மிகவும்  நளினமாக ‘Poll dancing’ ஆடும் வீடியோ, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.


 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரத்தைச் சேர்ந்தவர், ஆலிசான் ஸ்பஸ். 9 மாத கர்ப்பிணியான ஆலிசான், தொழில்முறை நடனக் கலைஞர். ஆர்லாண்டோவில் உடற்பயிற்சி மற்றும் நடனம் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிகிறார். போல் டான்சிங் ஆடுவதில் கைதேர்ந்த கலைஞரான ஆலிசான்,  தனது கர்ப்பகாலத்திலும் நடனம் ஆடுவதை நிறுத்தவில்லை.  

சமீபத்தில், தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவரின் நடன வீடியோ, சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  ‘நிறைமாத கர்ப்பிணியான ஆலிசானால் இவ்வளவு நளினமாக எப்படி நடனம் ஆட முடிகிறது’ என்று பலர் பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஒரு சிலர்,  ‘இது மிகவும் ஆபத்தான முயற்சி. வயிற்றில் வளரும் சிசுவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்’ என்று பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

 Poll dancing வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஆலிசான், ‘நான் இப்போது 9 மாத கர்ப்பிணி. என்னுடைய உடல் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது. ஆனாலும் நான் தினமும் மேற்கொள்ளும்  ஃபிட்னஸ் பயிற்சிகளை நிறுத்தவில்லை.  போல் நடனத்தைத் தினமும் உடற்பயிற்சிபோல செய்துவருகிறேன்’ என்று கூறியுள்ளார் கூலாக!

Sponsored
Trending Articles

Sponsored