இந்த மியூசியம்ல செல்ஃபி எடுக்க மட்டும்தான் அனுமதி! #MuseumofSelfiesSponsoredஇந்தக் காலத்து இளைஞர்களுக்கு செல்ஃபியும் ஒருவித கலைதான். ஒளி, ஆங்கிள் (Angle), பர்ஃபெக்‌ஷன் (Perfection), ஃபோக்கஸிங் (Focusing) எனப் பலவற்றை சரிபார்த்து எடுப்பதற்குள் அன்றைய தினத்தில் பாதி முடிந்துவிடும். ஆனால், லாஸ் ஏஞ்சலஸில் உள்ள `Museum of Selfies' எனும் அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்க எந்த நேரக் கட்டுப்பாடுமில்லை. இது செல்ஃபி எடுப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மியூசியம்.

காலையில் எழுந்ததிலிருந்து குளிக்கும் முன்னர், குளித்தப் பிறகு, சாப்பிடும் முன்னர், சாப்பிட்டப் பிறகு, பேருந்துநிலையம் முன், அலுவலகம் முன், டிராஃபிக்கில் நிற்கும் நேரம்... இப்படி லிஸ்ட் நீண்டு, தூங்கும் முன்னர் வரை அனைத்தையும் செல்ஃபியில் கேப்ச்சர் செய்து மொபைல் மெமரியில் சேகரித்துக்கொள்கின்றனர் யூத்துகள். 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் `செல்ஃபி'க்கு அடிமை எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், இதுவே உண்மை. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த `ரெம்பிரன்ட்' இதற்கு `குரு' என்றும் சொல்லலாம். இவர் ஓர் ஓவியர். நூற்றுக்கும் மேற்பட்ட, தன் சுய உருவப்படத்தை வரைந்து அழகு பார்த்தவர். இவரைத் தொடர்ந்து ஆல்பிரெட்ச் டியூரர் (Albrecht Dürer), Van Gogh Dozens போன்றோரும் தங்களின் உருவப்படத்தை தாங்களே வரைந்துகொண்டவர்கள். தற்போது பரவிவரும் செல்ஃபி வைரல்களுக்கு இவர்கள்தான் முன்னோடி.

Sponsored


இவர்களை போற்றும்வகையிலும், அந்த நாட்டில் அழிந்துவரும் பாரம்பர்யத்தைக் காப்பாற்றும் வகையிலும், இப்படி ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளனர் டாமி ஹான்டன் மற்றும் மேமிடோவ். அருகாட்சியகம் என்றாலே, நினைவுகளின் ஆலயம் எனலாம். பொதுவாகவே அங்கே எந்தப் பொருளையும் தொடுவதற்கு அனுமதியிருக்காது. முக்கியமாக, புகைப்படங்களுக்கு மிகப்பெரிய `இல்லை' போர்டுதான் இருக்கும். ஆனால், இந்த செல்ஃபி மியூசியத்தில் உங்கள் இஷ்டம்போல எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப பல செயற்கை மாதிரிகள் இங்கே உண்டு.

Sponsored


``இதுக்கெல்லாம் ஒரு மியூசியமா?'' என்று டாமி ஹான்டனிடம் அந்நாட்டு செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``செல்ஃபி என்பது இந்த நூற்றாண்டில் இருக்கும் ஒன்று என்ற தவறான எண்ணம் நமக்கு உண்டு. ஆனால், இது நம் ரத்தத்தில் ஊறிய ஒன்று. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால் இன்று மொபைலில் பதிவுசெய்கிறோம். இதையேதான் அந்நாளில் கைப்பட வரைந்திருக்கிறார்கள். அதையும் நாங்கள் சேகரித்துவைத்துள்ளோம். வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவைத்த இது, முக்கியமான ஒன்றுதான்" என்று கூறியுள்ளார் டாமி.

சுமார் 8000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், `faux skyscraper' - அதாவது 20 மாடிக் கட்டடம் மாதிரி 3D-யில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிலத்தில் நின்றுகொண்டே உயரமான மாடியில் நின்று புகைப்படம் எடுப்பதுபோல் முகபாவனைகளைக்கொண்டு அசத்தல் செல்ஃபி எடுக்கலாம்.

பெண்கள் அதிக நேரத்தைச் செலவிடும் இடம், ஒப்பனை அறை. காரணம், அங்கு உள்ள கண்ணாடி மற்றும் கையில் உள்ள மொபைல்போன். தங்களை விதவிதமாக மெருகேற்றி டங் அவுட், பவுட் எனப் பலவிதமான முகபாவனைகளைச் செய்து `ஒப்பனை அறையை' செல்ஃபியின் பிறப்பிடமாகவே மாற்றிவிட்டனர். இந்த அருங்காட்சியகத்தில் பிரதிபலிப்பில்லாத மாயை உருவாக்கி, `பாத்ரூம் செல்ஃபி' ஏரியாவை உருவாக்கியுள்ளனர்.

கார் பிரியர்களுக்காக சூப்பர் மாடல் `ஃபோக்ஸ்வேகன்  பீட்டில் (Volkswagen Beetle) காரின் மாதிரியும் வடிவமைப்பட்டுள்ளது. Darel Carey எனும் ஓவியரின் கைவண்ணத்தில் உருவான `ஆப்டிகல் எலெக்ட்ரிக்கல் டேப் இல்லூஷன்', வித்தியாசமான செல்ஃபி பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

`செல்ஃபி எடுக்கிறதுல நான் ராஜா/ராணி' என்று சொல்பவர்களுக்கு, இங்கு சிம்மாசனமே உள்ளது. முழுக்க முழுக்க `Selfie Stick' மற்றும் மொபைல் போன்களைக்கொண்டு உருவான அரியணை இது. மேலும் விசித்திரமான சுவாரஸ்யமான சில உடைமைகளும் இங்கே உள்ளன.Trending Articles

Sponsored