`அனைத்துத் தவறுகளுக்கும் நானே முழுப்பொறுப்பு' - மன்னிப்பு கோரினார் மார்க் ஸக்கர்பெர்க்!Sponsored'ஃபேஸ்புக் தகவல்கள் வெளியானதுக்கு நானே முழுப்பொறுப்பு, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு, ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களைத் திருடி, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உதவி செய்தது என சமீபத்தில் பிரிட்டனின் சேனல் 4 செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம், அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு, குறிப்பாக அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்குக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க பார்லிமென்ட் செனட் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை முன் மார்க் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். 

Sponsored


அதில், ``கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எங்களுக்கு பாடம் கற்றுத்தந்துள்ளது. தகவல் திருட்டு மற்றும் வெளிநாட்டுத் தேர்தல்களில் தலையீடு உள்ளிட்டவை, ஃபேஸ்புக் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்னை. இதனால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மில்லியன் கணக்கான தனிநபர்களின் தகவல்கள் அப்ளிகேஷன் டெவலப்பர்களிடமிருந்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா வாங்கியுள்ளது. ஃபேஸ்புக்கை நான்தான் துவங்கினேன்; அதை நடத்தி வருவதும் நானே. எனவே, ஃபேஸ்புக் நிறுவனத்தில் நடக்கும் தவறுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்துக்குப் பின், எங்களின் முதல்வேலையே உலக நாடுகளின் தேர்தல்களுடைய  நேர்மையைக் காக்க வேண்டும் என்பதே. அந்த வகையில், இந்தியாவில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் நேர்மையைக் காப்போம் என உறுதியளிக்கிறோம்" என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored