`தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்!’ - மோடி வருகையின்போது ஸ்வீடனில் ஒலித்த குரல்கள்ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகளை வலியுறுத்தியும் வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையிலும் சிறு ஆர்ப்பாட்டத்தைத் தமிழர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். 

Sponsored 

Sponsored


பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார். இன்று அதிகாலை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் மோடிக்கு ஸ்வீடன் நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் லோவன் உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து இந்தியா - நார்டிக் உச்சி மாநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்.

Sponsored 

உற்சாக வரவேற்பு ஒருபுறம் இருக்க, ஸ்வீடன் வாழ் இந்தியர்கள் சிலர் மோடிக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து என இவர்களின் கோரிக்கை பட்டியல் நீள்கிறது. பிரதமர் மோடி சுவீடன் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்த நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழர்களோடு ஸ்வீடன் நாட்டில் வாழும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்துகொண்டதுதான்.Trending Articles

Sponsored