கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்..! பிரதமர் மோடி வேண்டுகோள்Sponsoredகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பற்றி பிரதமர் மோடி, லண்டனில் பேசியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளார், பிரதமர் மோடி. அங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். லண்டனின் புகழ்பெற்ற சென்ட்ரல் ஹாலில் இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்தார். அப்போது, 'குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது, அதை முன்பிருந்த அரசாங்கத்தின்போது நடைபெற்ற வன்கொடுமைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாது. வன்கொடுமை என்பது, எப்போது நடந்தாலும் வன்கொடுமைதான். இதை எப்படி நான் ஏற்றுக்கொள்ள முடியும்? மேலும், இந்த வன்கொடுமைகளை அரசியலாக்கக் கூடாது” என கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து தெரிவித்தார்.

Sponsored


மேலும், “நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் பெண்களே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சமீப காலமாக நடக்கும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களும் ஏதோ ஒரு தாய்க்கு பிறந்தவர்கள்தான். நமது நாட்டின் மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது மிகவும் கவலையை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Sponsored


முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கத்துவா சிறுமி வன்கொடுமைபற்றிப் பதிவிட்டிருந்தார். அதில்,  'கடந்த 2016-ம் ஆண்டு முதல் சுமார் 19 ஆயிரத்து 675 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்” என தெரிவித்திருந்தார். ராகுலின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே மோடி லண்டனில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் மோடி சென்றுகொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கத்துவா சிறுமியின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு சில போராட்டக்காரர்கள், மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.Trending Articles

Sponsored