இந்திய வீரர்களின் அணிவகுப்பைக் கிண்டல் செய்த பாக். கிரிக்கெட் வீரர்..!வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி நடந்துகொண்டுள்ளார். 

Sponsored


இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையான வாகா - அட்டாரி பகுதியில் தினமும் மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கொடியிறக்கும் நிகழ்ச்சிக்கு இருநாட்டு மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. தினமும் மாலை நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியைப் பார்க்க திரள்வார்கள். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு நாட்டு வீரர்கள் பாரம்பர்ய முறைப்படி அணிவகுப்புடன் கொடியை இறக்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, திடீரென அணிவகுப்புக்குள் புகுந்து இந்திய வீரர்களைப் பார்த்து அவர்களுக்குச் சவால் விடும் விதமாக நடந்துகொண்டார். 

Sponsored


கையால் தொடைகளை தட்டியும், இந்திய வீரர்களின் அணிவகுப்பைக் கிண்டல் செய்யும் விதமாகவும் அவர் நடந்துகொண்டார். இதை அந்நாட்டு ராணுவ வீரர்களும் தட்டிக்கேட்கவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் ஹசன் அலிக்குக் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். ஹசன் அலியின் செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் புகார் செய்யப்படும் என பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படை ஐஜி முகுல் தெரிவித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored