`மீண்டு வா இனுக்கா..!’ - வெப்ப மண்டலத்தில் பிறந்த முதல் துருவக் கரடிக்காகக் கண்ணீர்விடும் சிங்கப்பூர்



Sponsored



உடல்நலம் குன்றிவரும் இனுக்கா பனிக்கரடியைக் காண சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் கூட்டம் அலைமோதுகிறது.

`இனுக்கா’... வெப்ப மண்டலத்தில் பிறந்த முதல் மற்றும் ஒரே துருவ கரடி. `Sunbear' என்று செல்லமாக அழைக்கப்படும் இனுக்கா சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் 1990-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இனுக்காவின் 27வது பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடியது உயிரியல் பூங்கா நிர்வாகம்.

Sponsored



 

Sponsored


இனுக்கா சிங்கப்பூரின் செல்லப்பிள்ளை. விடுமுறை தினங்களில் இனுக்காவை காணக் குழந்தைகள் முதல் ஏராளமான பொதுமக்கள் பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இனுக்காவின் துள்ளல், சேட்டைக் குறைந்துவிட்டது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் படுத்துக்கொண்டிருக்கிறது. தனக்குப் பிடித்த மாட்டிறைச்சி, மீன் உணவுகளை முன்பு போல ஆர்வமாகச் சாப்பிடுவது இல்லை. முதிர்ச்சியடைவதால் இனுக்காவின் தசைகள் செயலிழந்து வருகின்றன. மூட்டுவலி, பற்கள் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதக் கடைசியில் அதற்குக் கூடுதல் உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று முன்னர், உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. பரிசோதனைகள் மற்றும் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் இனுக்காவின் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லாவிட்டால் கருணைக்கொலை செய்ய முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

காரணம், துருவக்கரடிகளின் சராசரி ஆயுள் காலம்  15 -18 ஆண்டுகள். மனிதப் பராமரிப்பில் இருக்கும் பனிக்கரடிகளின் சராசரி ஆயுள் 25 ஆண்டுகள். 27 வயதாகும் இனுக்கா வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளால்தான் உயிர் வாழ்ந்து வருகிறது.




 

இதுகுறித்து இனுக்காவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், `இனுக்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சில பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. அதற்குப் பிறகுதான் இனுக்காவின் உடல்நிலை முன்னேற்றம் அடைகிறதா அல்லது மோசமடைந்து வருகிறதா என்பது தெரிய வரும். இனுக்காவின் உடலநிலை தொடர்ந்து மோசமடைந்தால் அமைதியான வழியில் வழியனுப்ப முடிவெடுக்கப்படும். எனவே, ஏப்ரல் 25-ம் தேதி வரை மட்டுமே இனுக்காவை காண முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் மக்களுக்கு இனுக்காவை காண கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இனுக்காவை காண உயிரியல் பூங்காவில் கூட்டம் அலைமோதுகிறது. 


 

சோகத்தில் ஆழ்ந்துள்ள சிங்கப்பூர் மக்கள் இனுக்காவின் அறை வெளியே `GetWellSoon Inuka’ என்று எழுதி வைத்துவிட்டுச் செல்கின்றனர். 

Source : The Straits Times



Trending Articles

Sponsored