ஓர் ஆப்பிளுக்கு 500 டாலர் அபராதம்! - அதிர வைத்த அமெரிக்க சுங்கத்துறைSponsoredவிமானத்தில் வழங்கிய ஆப்பிளை வெளியில் கொண்டுவந்த ஒரு பெண்ணுக்கு அமெரிக்க சுங்கச் சாவடி 500 டாலர் அபராதம் விதித்துள்ளது.

பாரிஸிலிருந்து அமெரிக்கா செல்ல விமானத்தில் 9 மணி நேரமாகும். இந்தப் பயணத்தின் முடிவில் டெல்டா ஏர் லைன் விமானத்தில், பயணித்த பயணிகளுக்கு இலவச சிற்றுண்டியாக ஓர் ஆப்பிள் பழம் வழங்கப்பட்டுள்ளது. பழம் வழங்கப்பட்ட நேரத்தில் தனக்கு பசி இல்லாததால் டாட்லோக் என்ற பெண் அதைப் பிறகு சாப்பிடலாம் எனக் கருதி பழத்தைத் தனது பைக்குள் வைத்து வெளியே கொண்டுவந்துள்ளார். வெளியில் வந்த பின்பு அமெரிக்க சுங்க சோதனையில் அப்பெண்ணின் பை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது அதில் டெல்டா விமானத்தின் லோகோ-உடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் பையில் ஆப்பிள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள் இதை எப்படி வெளியில் கொண்டுவந்தீர்கள் எனக் கேட்டு, அதற்கு அபராதமாக 500 டாலர் (இந்திய மதிப்பில் 33,000 ரூபாய்) விதித்துள்ளனர்.

Sponsored


Sponsored


இது குறித்து பேசிய டாட்லோக், “பழத்தை வெளியில் கொண்டுவந்ததால் எனக்கு 500 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் முடிவில் பழத்தை வழங்கியது விமானத்தின் தவறு, மேலும், அதை வெளியில் கொண்டு செல்லக் கூடாது என விமான நிறுவனம் பயணிகளுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். அதுவும் அவர்கள் செய்யவில்லை. இது தொடர்பாக நான் வழக்கு தொடரப்போகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்டா ஏர்லைன் விமான நிர்வாகம், பயணிகள் அனைவரும் சுங்க விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.Trending Articles

Sponsored