அதிபரான 500 நாள்களில் ட்ரம்ப் விரும்பாத 10 சம்பவங்கள்!Sponsoredஅமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து ட்ரம்ப் பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். தினசரி சராசரியாக 7 ட்வீட் செய்கிறார் என்பது தொடங்கி இஸ்லாமிய நாடுகள் மீதான தடை, வட கொரியா விவகாரம், சிரியாவில் போர், ரஷ்யாவின் தேர்தல் குறுக்கீடு எனப் பல விஷயங்களில் எதிர்மறை கருத்துகளும், பாலியல் புகார்களும் ட்ரம்பின் காலைச் சுற்றும் பாம்பாக வலம் வருகின்றன. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 500 நாள்களுக்கு மேலாகிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் ட்ரம்பை நேரடியாகச் சோதித்த 10 சம்பவங்கள் இதோ... 

பிப்ரவரி - 13

Sponsored


மைக்கேல் ப்ளைன்

Sponsored


தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

ரஷ்ய தூதருடனான பேச்சுவார்த்தை குறித்து துணை அதிபரிடம் மறைத்ததற்காகப் பதவி விலகினார். எஃப்.பி.ஐ-யிடம் மன்னிப்பும் கோரினார்.


மே - 9

ஜேம்ஸ் கோமே

எஃப்.பி.ஐ. இயக்குநர்

ட்ரம்ப் பிரசாரம் மற்றும் ரஷ்யக் குறுக்கீடு குறித்து அதிபருக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்ததற்காக ட்ரம்ப் இவரைப் பதவியை விட்டு விலக்கினார். 


மே - 17

ராபர்ட் முல்லர்

சிறப்பு விசாரணை அதிகாரி

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டார். இவர், ட்ரம்ப் பிரசாரத்தில் நடந்த பல முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தார்.


அக்டோபர் - 5

ஜார்ஜ் பபடோபோலோஸ்

தேர்தல் பிரசார அதிகாரி

அதிபர் தேர்தலின்போது ரஷ்ய அதிகாரிகளுடன் ரகசியச் சந்திப்புகள் நடைபெற்றதை மறைத்துவிட்டேன் என்று எஃப்.பி.ஐ விசாரணையில் தெரிவித்தார். பொய்யான தகவல்களைத்தான் பிரசாரத்தில் தெரிவித்ததாகவும் கூறினார்.


அக்டோபர் - 27

பால் மானஃபோர்ட் மற்றும் ரிக் கேட்ஸ்

தேர்தல் பிரசார அதிகாரிகள்

ஆரம்பத்தில் இருவரும் பணமோசடி செய்ததை மறுத்தாலும், எஃப்.பி.ஐ. விசாரணையில் பண மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் தேர்தல் பிரசார அதிகாரிகளாகப் பணியாற்றியபோதுதான் இந்தப் பண மோசடி நடந்துள்ளது. 


மார்ச் - 6

ஸ்ட்ரமி டேனியல்ஸ்

போர்ன் நடிகை (Porn Actress)

2006-ம் ஆண்டு அதிபர் ட்ரம்புடன் தவறான உறவில் இருந்ததற்காகச் சட்டரீதியாக வழக்கு தொடர்ந்தார். இவர், தொழில்ரீதியாக போர்ன் நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் தரப்பு மறுப்பு தெரிவித்தாலும் வழக்கு இன்னும் அப்படியேதான் உள்ளது. 


மார்ச் - 20

கரேன் மெக்டோகல்

முன்னாள் ப்ளேபாய் இதழ் மாடல்

2006-ம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் முறையற்ற உறவில் இருந்ததாக வழக்கு தொடர்ந்தார். இவரது வாழ்க்கை நிகழ்வுகளை 1.5 லட்சம் அமெரிக்க டாலருக்கு ட்ரம்பின் நண்பர் நடத்தும் நிறுவனத்துக்குப் படமாக்குவதற்காக விற்றுள்ளார். பின்னர் அதிலிருந்து விலகியுள்ளார்.


மார்ச் - 21

சம்மர் செரோவஸ்

மாடல்

2006-ம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் முறையற்ற உறவில் இருந்ததாக வழக்கு தொடர்ந்தார். 


மார்ச் - 22

ஜான் டோவ்ட்

ட்ரம்பின் வழக்குரைஞர்களில் ஒருவர்.

முல்லரின் கேள்விகளுக்கு ட்ரம்ப் அளித்த பதிலில் அதிருப்தி நிலவியதால் வழக்கறிஞராகத் தொடர மறுத்துப் பதவி விலகினார்.


ஏப்ரல் - 9

மைக்கேல் கோகென்

ட்ரம்பின் வழக்குரைஞர்

இவரது வீட்டில் எஃப்.பி.ஐ. நடத்திய ரெய்டில் 1.3 லட்சம் அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டன. தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு தொடர்பான வழக்கில், பண மோசடி செய்துள்ளார் என்பது இவர் மீதுள்ள வழக்கு.

இன்னும் 4 வருடங்களில் என்னவெல்லாம் சர்ச்சைகள் வரப்போகிறதோ என்ற பயம், ட்ரம்புக்கும் கட்டாயம் இருக்கும். குறைந்த நாளில் அதிக சர்ச்சை கொண்ட அதிபராக ட்ரம்ப் வலம் வருவதும் ட்ரம்பின் சா(சோ)தனைதான்.Trending Articles

Sponsored