'சிகிச்சைக்கு இந்திய மருத்துவமனை முன்வந்தும் விசா கிடைக்கலியே!’ - பாக். ஹாக்கி வீரர் உருக்கம்Sponsoredபாகிஸ்தான் அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் மன்சூருக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய இந்திய மருத்துவமனை முன்வந்துள்ளது.

photo credit : @barristeraamir

Sponsored


பாகிஸ்தான் நாட்டு முன்னாள் ஹாக்கி வீரர் மன்சூர் அஹமது. 1986 - 2000 காலகட்டத்தில் பாகிஸ்தான் ஹாக்கி அணியில் கோல்கீப்பராக இருந்த மன்சூர், 1994-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். இதுவரை 338 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1992-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள மன்சூர், சமீபகாலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காகக் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு இந்தியாவைச் சேர்ந்த போர்டிஸ் (fortis) மருத்துவமனை இலவசமாக இருதய மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள முன்வந்துள்ளது. ஆனால், அவருக்கு விசா பெறுவதில் எழுந்துள்ள சிக்கலால் சிகிச்சை தள்ளிப்போகிறது. 

Sponsored


இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ''இந்திய அரசின் விசாவுக்காக மன்சூர் காத்திருக்கிறார். அவருக்கு விசா கிடைத்தவுடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்"  என்றனர். இதற்கிடையே, இந்திய அரசு விசா அளிக்கும் பட்சத்தில் சென்னை அல்லது மும்பை மருத்துவமனையில் அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக விசா கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், இந்திய அணியுடனான நினைவுகளைப் பகிர்ந்து மன்சூர் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், ''இந்திய அணிக்கு எதிராகப் போட்டிகள் விளையாடிய பல நினைவுகள் எனக்கு உண்டு. நாங்கள் விளையாட்டில் போட்டியாளர்களாக இருந்தோம். ஆனால் இரவில், நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, ஒன்றாக ஷாப்பிங் செல்வது என ஒற்றுமையாக இருந்தோம்" எனக் கூறியுள்ளார். Trending Articles

Sponsored