பத்திரிகையாளர்களைக் குறிவைத்து நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்Sponsoredகாபூலில் நடைபெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பில், பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை 8 மணியளவில், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு,  இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாதவர்கள், குண்டை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். குண்டு வீச்சைத் தொடர்ந்து, அங்கு  பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் , காவலர்கள் என அனைவரும் கூடினர். கூட்டம் கூடிய பிறகு, அடுத்த சில மணிநேரங்களில் கூட்டத்தின் நடுவே ஒரு குண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில், சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில், பத்திரிகையாளர்களும் இறந்துள்ளனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Sponsored


இந்தக் குண்டு வெடிப்பு, பத்திரிகையாளர்களைக் கொல்வதற்காகவே நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது. ஒரு குண்டு வெடிப்பின்மூலம் கூட்டத்தைக் கூட்டி, அந்தக் கூட்டத்தின் நடுவே பத்திரிகையாளர் போல வேடமணிந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என அப்பகுதி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுபேற்றுள்ளது. 9 வெவ்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இந்தக் குண்டுவெடிப்பில் இறந்துள்ளனர்

Sponsored
Trending Articles

Sponsored