'நண்பர்கள்கூட உதவத் தயங்குகிறார்கள்' - ஜாக்கி சானின் மகள் கண்ணீர்Sponsoredநடிகர் ஜாக்கிசானின் மகள், வசிக்க இடமில்லாமல் ஹாங்காங் நகரில் உள்ள ஒரு பாலத்துக்கு அடியில் வசித்துவருகிறார். இதுதான் இன்றைய ஹாட் டாபிக்.

ஜாக்கிசானின் மகள் எட்டா நிக், சானுக்கும் அவரின் முன்னாள் மனைவி எலையன் நிக் என்பவருக்கும் பிறந்தவர். இவருக்கு, தற்போது 18 வயதாகிறது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர் எட்டா நிக். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தன் பெண் நண்பர் அண்டி அடூம்ன் என்பவருடன் தான் ஓரினச்சேர்க்கையில் இணைந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், இவரின் பெண் தோழியின் வயது 30 என்பதுதான். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்தன. இதனால் வெறுத்துப்போன எட்டா நிக்கின் தாயார், தன் மகளை வீட்டைவிட்டு வெளியேற்றினார். ‘கடவுள் எனக்கு அளித்த மோசமான சம்பவம்‘ என ஜாக்கிசான் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு ஒதுங்கிக்கொண்டார்.

Sponsored


ஆறுமாதங்கள் கழிந்த நிலையில், ‘நானும் என் பெண் தோழியும் உணவில்லாமல், வசிக்க இடமில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். ஒருவேளை உணவுக்கே மிகவும் சிரமமாக இருக்கிறது. தங்குவதற்கு சரியான இடம் இல்லை. நல்ல உடைகளும் இல்லை. என் தந்தை பிரபலம் என்பதாலும், எங்கள் உறவு அவருக்குப் பிடிக்கவில்லை என்பதாலும் எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. பல இடங்களில் உதவிகள் கேட்டும் கிடைக்கவில்லை. நண்பர்கள்கூட உதவத் தயங்குகிறார்கள். தற்போது, உணவில்லாமல் தவித்து வருகிறோம். அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் எங்களுக்குத் தெரியவில்லை. அனைவரும் எங்களை உதாசீனப்படுத்துகிறார்கள். எங்களை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது மனவேதனை அளிக்கிறது’ என சோகம் ததும்ப, சமூக வலைதளங்களில் பதிவுசெய்துள்ளார் எட்டா நிக். 

Sponsored


இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஜாக்கிசான் மறுத்துவிட்ட நிலையில், எட்டா நிக்கின் தாயார், ‘‘அவரிடம் பணமில்லை என்றால் ஏதாவது வேலை தேடிக்கொள்ள வேண்டும். உழைத்து தனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, இதுபோல சமூக வலைதளங்களில் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல’’ எனக் கருத்து தெரிவித்துள்ளார். Trending Articles

Sponsored