ஆதார் முறையை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் - பில் கேட்ஸ் அட்வைஸ்Sponsoredஇந்தியாவில் இருக்கும் பிரதான அடையாள அட்டையான ஆதார் முறையை மற்ற நாடுகளும் பயன்படுத்த வேண்டும் என உலக பணக்காரர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை போல் மற்ற நாடுகளிலும் பயன்படுத்த வேண்டும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், உலக பணக்காரருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஆதார் முறையை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதுக்காக, உலக வங்கிக்குத் தனது மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனரும், ஆதார் அட்டையின் வடிவமைப்பாளருமான நந்தன் நிகேளி-யும் உலக வங்கிக்கு உதவி வருவதாகக் கூறியுள்ளார்

Sponsored


ஆதார் பற்றி பில் கேட்ஸிடம் கேட்கப்பட்டபோது, ஆதார் சிறந்த அடையாள அட்டை அதன் மூலம் ஒவ்வொரு தனி நபரின் அடையாளங்களை மிக விரைவில் கண்டுபிடித்துவிடலாம். அதில்  ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பாக இருக்கும் அவர்களின், விரல் ரேகைகள், கண் விழித்திரை இதனுடன் சேர்த்து முகவரி, சுய விவரம் மற்றும் பிற குறிப்புகளும் உள்ளீடு செய்யப்படுகிறது.  இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ஆதார் அட்டையின் மூலம் தனிப்பட்ட உரிமைகளுக்கும், விவரங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த முறையை மற்ற நாடுகளும் பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்று எனத் தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored