அணுசக்தி ஒப்பந்தம்குறித்த ட்ரம்ப்பின் முடிவு பெரும் தவறு - ஒபாமா வருத்தம்'ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு பெரும் தவறு' என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

Sponsored


பராக் ஒபமா, அமெரிக்காவின் அதிபராக இருந்துபோது, 2015-ம் ஆண்டு ஈராக், ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்தே ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். இந்த நிலையில் தற்போது, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Sponsored


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 'மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் அழிவுக்கான போர் அல்லது அணு ஆயுதப் பரவலைவிட அமெரிக்காவின் பாதுகாப்புக்கு வேறு பல விஷயங்கள் முக்கியமானதாக உள்ளன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் முடிவு பெரிய தவறு' என்று குறிப்பிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored