`உலக அமைதிக்கான முக்கியமான தருணம்!’ - கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு குறித்து நெகிழும் ட்ரம்ப்வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, வரும் ஜூன் 12-ம் தேதி சந்தித்துப் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

Sponsored


அணு ஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா மீது உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்திருந்தன. கொரியப் போருக்குப் பின்னர் தென்கொரியாவுடன் மோதல் போக்கைக் கடந்துவந்த வடகொரியா, அந்நாட்டை மிரட்டும் தொனியில் அடிக்கடி அணுஆயுதச் சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால், உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடகொரியா, சமீபத்தில் சமாதானப் பேச்சுக்கு இறங்கி வந்தது. முதல்படியாக தென்கொரிய அதிபர் மூன் ஜியே இன்-னை அந்நாட்டு எல்லைக்கே சென்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தது உலக நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.

Sponsored


தென்கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்திக்கவும் கிம் விருப்பம் தெரிவித்திருந்தார். அணு ஆயுதச் சோதனைகள் நடத்தி வந்த வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்திருந்தது. இதனால், அமெரிக்கா - வடகொரிய இடையில் பனிப்போர் நீடித்து வந்தது. உச்சகட்டமாக கிம் - ட்ரம்ப் இடையில் கடுமையான வார்த்தைப் போரும் அரங்கேறியது. இந்தநிலையில்தான் ட்ரம்பைச் சந்திக்க கிம் விருப்பம் தெரிவித்திருந்தார். 

Sponsored


இந்தநிலையில் கிம் ஜாங் உன்னின் அழைப்பை ஏற்று அவரைச் சந்திக்க ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் வரும் ஜூன் 12-ம் தேதி நடக்கிறது. இந்தத் தகவலை ட்விட்டர் பதிவு மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு  ட்ரம்ப் உறுதிப்படுத்தியிருக்கிறார்.`உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக, அந்தச் சந்திப்பை மாற்ற நாங்கள் முயற்சி செய்வோம்’ என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  
 Trending Articles

Sponsored