`பயங்கரவாதத்தின் தந்தை பாலகங்காதர திலகர்' - ராஜஸ்தான் பாடப் புத்தகச் சர்ச்சை Sponsoredஇந்திய விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர். சமூக சீர்திருத்தவாதியான திலகரை, `பயங்கரவாதியின் தந்தை' என எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

ராஜஸ்தான் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், பள்ளிகளின் எட்டாம் வகுப்பு குறிப்புப் பாடப்புத்தகத்தில் `பாலகங்காதர திலகர், தேசிய இயக்கத்துக்கு எதிரான செயலை வெளிப்படுத்தினார். எனவே, அவர் பயங்கரவாதத்தின் தந்தை' என அச்சிடப்பட்டுள்ளது. இது, 267 பக்கத்தில் 22ம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மதுரா பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறது. 

Sponsored


Sponsored


இதுகுறித்து பேசிய புத்தக வெளியீட்டாளர் அலுவலக அதிகாரி ராஜ்பால் சிங்,`இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. வார்த்தை சிக்கல் காரணமாக, விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை, பயங்கரவாதத்தின் தந்தை எனத் தவறுதலாக குறிப்பிடப்பட்டு விட்டது. தவறுதலாக மொழி பெயர்ப்பு செய்ததே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்' என்றார். 

பாலகங்காதர திலகரை ``பயங்கரவாதத்தின் தந்தை" என்று விமர்சித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் சர்ச்சைக்குள்ளான தகவல்களை எழுதும் முன் வரலாற்று வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார், தனியார் பள்ளி சங்க இயக்குநர் கைலாஷ் சர்மா.Trending Articles

Sponsored