மலேசிய முன்னாள் பிரதமருக்கு வெளிநாடு செல்ல தடை -மகாதிர் அதிரடிSponsoredஊழல் குற்றச்சாட்டியில் சிக்கியுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பி.என் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மகதீர் முகமதுவின் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகதீர் முகமது மீண்டும் பிரதமரானார். மலேசிய அரசின் நிதியிலிருந்து 731 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்ததாக நஜிப் ரசாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்தத் தொகையை தனது வங்கிக் கணக்குகளில் மாற்றி நிதி முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. மலேசியாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரின் மனைவி ரோஸ்மா ஆகியோர் விடுமுறையைக் கழிக்க இன்று இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா செல்லத் திட்டமிட்டிருந்தாக தெரிகிறது. இந்தநிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரின் குடும்பத்தினரை நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored