தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய குடும்பம்! - இந்தோனேஷியாவில் 13 பேர் பலிSponsoredஇந்தோனேஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயா நகரின் கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர். 

சுரபயா நகரில் உள்ள 3 தேவாலயங்களில் இன்று காலை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களைக் குறிவைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் என்ற அதிர்ச்சித் தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். 

Sponsored


வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரில் சென்று முதல் தேவாலயத்தில் கணவன் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டாவது தேவாலயத்தில் தனது இரு மகள்களுடன் மனைவி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்தோனேஷிய போலீஸார் கூறியுள்ளனர். அதேபோல், மூன்றாவது தேவாலயத்தின் மீது அவர்களின் 18 மற்றும் 16 வயதுடைய இரு மகன்கள் உடலில் வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட அவர்களின் மகள்களின் வயது 12 மற்றும் 9 எனவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐஎஸ் அமைப்பின் ஆதரவு அமைப்பான ஜீமா அன்ஷரத் தௌலா (JAD) அமைப்பினர் இநந்த் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored