தீபிகாவின் பிரின்டட் கவுன், ஹூமா குரேஷின் மெட்டல் ஆடை..கேன்ஸில் அசத்தும் நடிகைகள்! #Cannes2018Sponsoredஉலகின் பிரமாண்டமான திரைப்பட  விழாக்களுள் ஒன்று, கேன்ஸ். ஆண்டுதோறும், பாரீஸின் பிரென்ச் ரிவேரா என்ற இடத்தில் நடைபெறும் இந்த விழா, இந்த மாதம் 9 முதல் 19 வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விழாவில், இந்தியத் திரையுலகம் சார்பாக, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், கங்கனா ரனாவத் எனப் பல பிரபல பாலிவுட் நடிகைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் திரைப்பட விழாவில், திரையிடப்படும் உலகப் படங்களையடுத்து, அதிக கவனம் ஈர்ப்பது, அங்கு வருகைதரும் பிரபலங்களின் விதவிதமான உடைகளே. அந்த வகையில், பாரீஸில் நடைபெறும் விழாவில் நம் இந்திய நடிகைகள் வண்ணமயமான உடைகள் அணிந்து அசத்தினார்கள். அவற்றுள் சில...

தீபிகா படுகோன்

Sponsored


Sponsored


PC: instagram.com/deepikapadukone

நியூயார்க்கில் `மீட் காலா 2018’ என்ற பிரமாண்ட கலை விழாவில் பங்கேற்று முடித்த கையோடு, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார் தீபிகா படுகோன். கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ளும் உற்சாகம், தீபிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பக்கத்தில் தெறிக்கிறது. மேக்கப் செய்துகொள்வதும் முதல் பிரத்யேக ஆடை அணிந்து போஸ் கொடுப்பது வரை, அப்டேட் செய்துவருகிறார். பிரபல ஆடை வடிவமைப்பாளர், ஸூஹேர் முராத் வடிவமைத்த வெள்ளை நிற கவுன் அணிந்து, ரெட் கார்பேட்டில் அழகு நடை போட்டார். அதற்குப் பொருத்தமாக, எம்ரால்டு மற்றும் வைர தோடு அணிந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை அன்று, பிரபலமான அஷி ஸ்டியோவின் `ஸ்பிரிங் சம்மர் 2018' கலெக்‌ஷனிலிருந்து, `ஸ்கல்ப்ட்ரல் ஃபூஷ்சியா' ( Sculptural Fuchsia) பிங்க் கவுன் அணிந்து, அட்டகாசமாக போஸ் கொடுத்தார். தவிர,  இரண்டு பிரின்டட் கவுன் அணிந்து போஸ் கொடுத்ததுதான் பலரின் கவனத்தை ஈர்த்தது.

கங்கனா ரனாவத்

PC: instagram.com

ரெட்ரோ ஸ்டைல், மினி ட்ரெஸ், ஜம்ப்ஸூட் என வெரைட்டி காட்டி அசத்தினார் கங்கனா ரனாவத். முதல் நாளன்று, பிரபல ஆடை வடிவமைப்பாளர், சப்யாக்ஷி முகர்ஜி வடிவமைத்த பளபளப்பான கறுப்பு நிற சேலை அணிந்திருந்தார். ரெட் கார்ப்பெட்டில், ஸூஹேர் முராத் வடிவமைத்த க்ரீம் நிற கவுனை அணிந்து `போஸ்' கொடுத்தார். நீட்ரெட் தசிரோக்லு உருவாக்கிய ஜம்ப்ஸூட் அணிந்து, பார்வையாளர்களை ஈர்த்தார். அதற்குமுன், ஈலிசாபேட்டா ஃப்ரான்சி வடிவமைத்த நீல நிற மினி டிரஸ் அணிந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய்

PC: instagram.com

கடந்த வருடம் போலவே, இந்த ஆண்டும் மகள் ஆராதயாவுடன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார், ஐஸ்வர்யா ராய். சில நாள்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்த ஐஸ்வர்யா ராய், தன் மகளுடன் கேன்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டபடி இருக்கிறார். ரெட் கார்ப்பெட்டில், மெக்கேல் சின்கோ உருவாக்கி மயில் நிற கவுன் அணிந்து அசத்தினார். அதற்கு முந்தைய நாள், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் அரோரா வடிவமைத்த, மல்டி கலர் கவுன் அணிந்துகொண்டார். மற்றொரு நாள், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர், ரமி கேடி வடிவமைத்த மின்னும் வெள்ளி நிற கவுனை அணிந்திருந்தார்.  

ஹூமா குரேஷி

PC: instagram.com

`காலா' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழையும் ஹூமா குரேஷி, திருவிழாவின் முதல் நாளில் ஃபெப்ரிக் உடையில் மெட்டலில் வடிவமைக்கப்பட்ட டிசைன் ஆடையை அணிந்திருந்தார். பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் வருண் பாஹ்ல் வடிவமைத்த வெள்ளை நிற கவுன் அணிந்து, பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

மல்லிகா ஷராவத்

PC: instagram.com

கடந்த ஒரு வருடமாகப் பாலிவுட் பக்கம் தலைகாட்டாத நடிகை மல்லிகா ஷராவத், இந்த விழாவில், பிங்க் நிறத்தில் கறுப்பு நிற டிசைன் போடப்பட்ட கவுனில், ரெட் கார்பெட் வலம்வந்தார். ஆனால், ஒப்பனைகள் எதுவும் பெரிதாக இல்லாமல் சிம்பிளாகவே தோன்றினார்.Trending Articles

Sponsored