காசா எல்லையில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் - உலக நாடுகள் கண்டனம்!



Sponsored



பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், 59 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறிக் கடந்த ஆண்டு ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்கீகரித்தார். மேலும், நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டது. முன்னதாக, ஜெருசலமை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சொந்தம் கொண்டாடியது. இதனால், இரு நாடுகளும் நீண்டகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

Sponsored


இந்த நிலையில், இஸ்ரேல் தனிநாடாக உருவாக்கப்பட்டபோது பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்தார்கள். இதனை `நக்பா' என்று அழைக்கப்படுவதுண்டு. இந்த நிகழ்வின் 70-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்தனர். அப்போது இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைக் கட்டுப்படுத்த, இஸ்ரேல் படையினரும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். 

Sponsored


இந்தத் தாக்குதலில், 59 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே போர் மூண்டது. அதன்பிறகு, நடந்த மிகப்பெரிய மோதல் இதுவாகும். இதற்கு, உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக காசா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.



Trending Articles

Sponsored