மலேசியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஒழிப்பு!லேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்றுள்ளார். தேர்தல் பரப்புரையின்போது, தான் பதவிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக மகாதீர் வாக்குறுதி அளித்திருந்தார். ஜி.எஸ்.டி வரிக்குப் பதிலாக மீண்டும் விற்பனை மற்றும் சேவை வரியைக் கொண்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

Sponsored


சமீபத்தில் தேர்தலில் தோல்வியடைந்த நஜீப் ரஸாக்கின் அரசு, கடந்த 2015-ம் ஆண்டு 6 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது. ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியதுமே மலேசியாவில் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்தன. சராசரி வருமானம் கொண்ட மக்கள் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்தனர். இதனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு மலேசியா முழுவதுமே பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. 

Sponsored


இதையடுத்து, நடந்து முடிந்த தேர்தலில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அறிமுகப்படுத்திய நஜீப் ரஸாக் படுதோல்வியடைந்தார். இந்நிலையில், புதியதாகப் பதவியேற்றுள்ள மகாதீர் அரசு, ஜூன் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. குறுகிய காலத்தில் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்துவிட்டு விற்பனை மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தவது சவால் நிறைந்தது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு முன்னதாகக் கடைசியாக ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்திய நாடு மலேசியா. ஆனால், 3 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மலேசியாவிடமிருந்து இந்தியா பாடம் படித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அரசியலில் பெரும் விளைவுகள் ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Sponsored
Trending Articles

Sponsored