அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..! 10 பேரைக் கொன்ற பள்ளி மாணவன்அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பள்ளியில் மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். 

Sponsored


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ளது சாண்டா பி உயர் நிலைப்பள்ளி. அந்தப் பள்ளிக்குள், துப்பாக்கியுடன் நுழைந்த டிமிட்ரியோஸ் பகோர்டிஸ் என்ற 17 வயது மாணவன், சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். அதில், அவனுடன் படித்த சக மாணவர்கள் 9 பேரும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்தனர்.

Sponsored


Sponsored


துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவனை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பள்ளியில் நடைபெறும் மூன்றாவது துப்பாக்கிச் சூடு இதுவாகும். Trending Articles

Sponsored