இளவரசருக்குத் திருமணப் பரிசாக 'காளை' - பீட்டாவின் யூனிக் கிஃப்ட்Sponsoredபிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே திருமணத்துக்கு, பீட்டா இந்தியா தனித்துவமான பரிசு ஒன்றை வழங்கியுள்ளது. 

(PC -Ndtv)

Sponsored


இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கலே திருமணம், விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று நடைபெற்றது. திருமணத்தையொட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக காளை ஒன்றை வழங்க, இந்தியாவில் செயல்படும் விலங்குகள் நலவாரிய அமைப்பான பீட்டா நிறுவனம் முடிவு செய்தது. 

Sponsored


இதையடுத்து, ஹாரி மற்றும் மேகன் இவர்களின் பெயரில் இருந்து `மேரி' என்று அந்தக் காளைக்கு பெயர் சூட்டப்பட்டது. அந்தக் காளை, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சரணாலயத்தில் தற்போது பாரமரிக்கப்பட்டுவருகிறது. முன்னதாக, கழுத்தில் ஆழமான காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த காளையை பீட்டா அமைப்பினர் மீட்டெடுத்தனர். 

ஹாரி - மேகன் மார்கலேவுக்கு திருமணப் பரிசாக மேரியை வழங்க பீட்டா அமைப்பு திட்டமிட்டது. இதுகுறித்து கூறிய பீட்டா நிறுவனர் இங்க்ரிட் நியூக்ர்கெக் `புகழ்பெற்ற இந்த ஜோடிக்கு, சிறப்பான திருமண நாள் பரிசு கொடுக்க விரும்பினோம். அதேநேரம், விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதைத் தடுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டி, காளையைத் திருமணப் பரிசா வழங்க முடிவுசெய்தோம். ஏற்கெனவே, ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, ஒரு டன் எடையுள்ள காளையைப் பராமரித்துவருகின்றனர். ஆனால் அந்த காளை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதால், அதை பரிசளிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே அந்த காளையின் புகைப்படத்தை பரிசளிக்க இருக்கிறோம்' என்றார். Trending Articles

Sponsored