இலக்கை நோக்கி புறப்பட்டது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்..!



Sponsored



உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இது அந்நாட்டின் நகரங்களுக்குச் சென்று மின்சாரம் வழங்க உள்ளது.

ஒரு பெரிய சரக்கு கப்பலை போல் காட்சியளிக்கும் உலகின் முதல் மிதக்கும் மற்றும் நகரும் அணு மின் நிலையத்தை ரஷ்ய அரசு உருவாக்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 600 கோடிக்கும் அதிகமான பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 144 மீட்டர் நீலமும் 30 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அணுமின் நிலையம் கடந்த மாதம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. 

Sponsored


நேற்று ரஷ்யாவின் முர்மான்ஸ் நகரில் இருந்து ஆர்டிக் வளைகுடா வழியாக பெவெக் நகரை நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு இறுதியில் பெவெக் நகரைச் சென்றடையும் என்றும் இதனால் அங்கு உள்ள ஊர்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் பல சிக்கல்கள் இருப்பதாகப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள ரஷ்ய அரசு, இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற பெரிய அலைகளைத் தாங்கும் அளவுக்கும் வலிமை மிக்கதாக இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

Sponsored




Trending Articles

Sponsored