டோரா ஷின் சானால் கோமாவுக்குச் சென்றாளா? `மரண கலாய்’ நெட்டிசன்கள்!Sponsoredடோரா புஜ்ஜி... இந்தப் பெயரைக் கேட்டாலே, குட்டீஸுடன் சேர்ந்து நாமும் குதூகலமாகிவிடுவோம். அவ்வளவு க்யூட் அண்டு ஸ்வீட், டோரா புஜ்ஜி கார்ட்டூன் கதாபாத்திரங்கள்.  சமூக வலைதளங்களில் டோரா ஃபேன்ஸ் படையெடுப்பு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. 

`என்னது... டோரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாளா? டோரா கோமாவில் இருக்கிறாளா? டோராவின் பாய் ஃப்ரெண்ட் ஷின் சானா? டோரா மரணத்துக்கு ஷின் சான் காரணமா? டோரா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி' என நக்கலும் நையாண்டியுமாக, மீம்ஸ்களைத் தெறிக்கவிடுகிறார்கள் நெட்டிசன்கள்.

Sponsored


Sponsored


PC: twitter.com

டோரா தி எக்ஸ்புளோரர் ( Dora the Explorer) என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, முதன்முதலில் 2000-ம் ஆண்டு, `நிக்கலோடியன் ஜூனியர்' என்ற அமெரிக்க சேனலில் ஒளிப்பரப்பானது. கிட்டத்தட்ட 170 எபிசோடுகள் கடந்து, 2014-ம் ஆண்டு நிறைவடைந்த இந்த கார்ட்டூன் தொடர் உலகமெங்கும் பிரபலமடைந்து. தமிழ், உருது, ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிப்பரப்பாகியது. இந்த நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவில் வழங்கப்படும் பீபாடி விருதும் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், டோரா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் உலவியது. இதனை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சையோடும், டோராவுக்காக ஷின் சான் மற்றும் சோட்டா பீம் சண்டை போடுவதுபோலவும், டோராவுக்கு அஞ்சலி போஸ்டர் உருவாக்கியும், டோராவுக்காக ஷின் சான் நெருப்புச் சட்டி தூக்குவதுபோலவும், `காலா' படத்தின் வசனத்தை டோரா பேசுவதுபோலவும் மீம்ஸ் உருவாக்கி, மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள்.

PC: twitter.com

அபி என்பவர் தனது ட்விட்டரில், `டோராவின் மரணத்துக்குக் காரணமான குள்ளநரியைப் பிடிக்க, தனிப்படை அமைக்கப்படும். மேலும், அவரை எண்ணி வாழும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ஸாரி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அவரது குடும்பத்துக்குத் தலா 10 ரூபாய் வழங்கப்படும்' என்று கலாய்த்துப் பதிவிட்டிருந்தார். 

PC: twitter.com

மற்றொரு ட்விட்டர் கணக்காளர், `டோரா உடல்நலம் சீராக உள்ளது. புதினா சட்னி, தேங்காய் சட்னியுடன் இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டார்' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை நேரச் செய்தியுடன் கிண்டல் அடித்திருக்கிறார்.

தினேஷ் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், `டோராவுக்கு அரிவாள் வெட்டு... குள்ளநரி துணிச்சல் பேட்டி! அவஞ்சர்ஸ் தூங்குகிறதா? என்னடா நாட்டுல ஒரு பொம்பளபுள்ளைய நடமாட விடமாட்றீங்க' என சீரியஸ் காமெடி செய்திருக்கிறார்.

மற்றொரு ட்விட்டர் கணக்காளர், `வீட்டில் டிவி பார்த்துட்டிருந்தால், டோரா வைங்கனு குட்டீஸ் தொல்லை. அப்படிக்க ஃபேஸ்புக் பக்கம் வந்தால், டோராவுக்கு சீரியஸ்னு தொல்லை. அடேய் செப்பா முடியலடா' என்று இந்த மீம்ஸ் தொல்லையில் கதறியிருக்கிறார்.

இப்படி, இரண்டு நாள்களாக, டோரா புஜ்ஜி, ஷின் சான், சோட்டா பீம் கதாபாத்திரங்களை வைத்து, நெட்டிசன்கள் கலாய்த்துத் தீர்த்துவிட்டார்கள். 

மேப் எடுத்துக்கிட்டு வா கண்ணு! Trending Articles

Sponsored