பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஷாருக்கான் உறவினர்..!Sponsoredபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் நெருங்கிய உறவினப் பெண் நூர் ஜெஹான் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்.

 
பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் நெருங்கிய உறவினர் நூர் ஜெஹான் போட்டியிடுகிறார். அவர், பேஷாவர் என்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதற்காக அவர், ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

Sponsored


தேர்தலில் போட்டியிடுவது குறித்து தெரிவித்த அவர், 'பெண்கள் முன்னேற்றத்துக்காக நான் தொடர்ந்து உழைக்கவேண்டும். எனது, தொகுதியிலுள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்துவேன்' என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த நூர் ஜெஹானுக்கான தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தும் அவரது சகோதரர் மன்சூர், 'எனது சகோதரி நூர் ஜெஹான் ஏற்கெனவே கவுன்சிலராக இருந்துள்ளார். எங்களது குடும்பம் சுதந்திரத்துக்கு முந்தைய காலக் கட்டத்தில் கடவுளுக்காக சேவை செய்துள்ளது. எங்கள் குடும்பத்துக்கு ஏற்கெனவே அரசியலுடன் தொடர்பு உள்ளது' என்று தெரிவித்தார். 

Sponsored
Trending Articles

Sponsored