பெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்!Sponsoredசீனாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன் இன்று பென்குவின் முக அமைப்புக் கொண்டதாக இருக்கிறது. இந்த மீனின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

சமீபத்தில் சீனாவின், குயாங் நகரில் குய்ஸோ என்ற பகுதியில் உள்ள மீனவர்களின் வலையில் ஒரு வித்தியாசமான மீன் சிக்கியுள்ளது. இதை அங்குள்ள சிலர் புகைப்படம் எடுத்தும் வீடியோவாகப் பதிவு செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அது வைரலாகி வருகிறது. இந்த மீன் சாதாரணமான உடல் அமைப்புடனே காணப்படுகிறது ஆனால் அதன் தலைப் பகுதி மட்டும் பென்குவின் முகத்தை ஒத்தும் டால்பின் முகம் போன்றும் காணப்படுகிறது. 

Sponsored


இந்த மீன் பற்றிய தகவல்களைக் கண்டறிய பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் பல சோதனை நடத்தினர். ஆனால், யாராலும் இதன் சரியான இனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தும் இது கொண்டை மீனின் குடும்பத்தைச் சேர்ந்தது எனச் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும், இது மீன் இனத்தைச் சேர்ந்ததா அல்லது மரபு நோய் குறைபாடா என்பது பற்றியும் சிலர் ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். தண்ணீரில் அதிக அளவு மாசுகளும் குப்பைகளும் கலப்பதால் இது போன்ற மீன்கள் உருவாவதாகச் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மீன் கருவில் இருக்கும்போதே சேதமடைந்திருக்க வேண்டும் அல்லது தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக் குறையாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

Sponsored
Trending Articles

Sponsored