ட்ரம்பின் முடிவை எதிர்க்கும் மனைவி! - குவியும் ஆதரவுSponsoredஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசின் குடியேற்ற சீர்திருத்தத்தைப் பார்த்து வெறுப்பதாக அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவரின், இந்தக் கருத்துக்கு பலதரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. 

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேற முயற்சி செய்பவர்கள் மீது, ட்ரம்ப் அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, சகிப்புத் தன்மை கொள்கையின்படி, அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் கடந்த ஏப்ரல் 19–ம் தேதி முதல் மே 31–ம் தேதி வரை இரண்டாயிரம் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியது. அதாவது, அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளைக் கைது செய்யும்போது அவர்களுடன் வரும் குழந்தைகள், அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் கீழ் செயல்படும் பராமரிப்பு மையத்துக்கும் குழந்தை வளர்ப்பு மையங்களுக்கும் மாற்றப்பட்டனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்குப் பலதரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. 

Sponsored


இந்த நிலையில், ட்ரம்பின் மனைவி மெலானியாவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இது, அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. `பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதைப் பார்த்து வெறுக்கிறேன். இருதரப்பு இடையில் நல்ல குடியேற்ற சீர்திருத்தத்தை அமைத்திட விரும்புகிறேன். இது நிச்சயம் அமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' என தெரிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored