11 குட்டிகள்; பேரக் குழந்தைகள்! - 62 வயதில் இறந்த `கின்னஸ்' உராங்குட்டான்Sponsoredஉலகின் மிகவும் வயதான உராங்குட்டான் குரங்கு ஆஸ்திரேலியா உயிரியல் பூங்காவில் உயிரிழந்தது. இதனால், ஆஸ்திரேலிய மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். `உராங்குட்டான் வகை குரங்குகள் 50 வயதுக்கு மேல் உயிர்வாழ்வது கடினம். ஆனால், புவன் (Puan) என்ற உராங்குட்டான் 60 வயதுக்கு மேல் வாழ்ந்தது மிகப் பெரிய சாதனை' என நெகிழ்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். 

(PC-NDTV)

Sponsored


புவன் எனப் பெயரிடப்பட்ட உராங்குட்டான் குரங்கு கடந்த 1956-ம் ஆண்டு பிறந்தது. மலேசியாவில் உள்ள சுல்தான் மிருகக்காட்சி சாலையில் இது வளர்ந்து வந்தது. அதன்பிறகு, ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மிருகக்காட்சி சாலைக்குக் கடந்த 1968-ம் ஆண்டு புவன் கொண்டு வரப்பட்டது. அங்கு 11 குட்டிகளை ஈன்றது. புவனின் வம்சாவளியினர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சுமத்ரா தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் பரவிக் கிடக்கின்றனர்.

Sponsored


அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ள உராங்குட்டான் குரங்குகள் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. உலகின் மிக வயதான புவன், `சுமத்திரன் உராங்குட்டான்' என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த நிலையில், 62 வயதான நிலையில் இரண்டு குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பெர்த் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த புவன் நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Trending Articles

Sponsored