இணைகின்றன அமெரிக்காவும் ஜெர்மனியும்... ஃபோர்டு - ஃபோக்ஸ்வாகன் ஒப்பந்தம்Sponsoredஅமெரிக்க நிறுவனமான ஃபோர்டு மற்றும் ஜெர்மன் நிறுவனமான ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு நிறுவனங்களும் இணைந்து கமர்ஷியல் வாகனச் சந்தையில் நுழையப் போகிறது.

 இந்தியாவில், இதுவரை இந்த இரண்டு நிறுவனங்களின் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் இல்லை. தற்போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணைவது இன்டர்நேஷனல் மார்க்கெட்டைப் பிடிக்கத்தான் என்றாலும், இந்தியாவிலும் இந்நிறுவனங்களின் கமர்ஷியல் வாகனங்கள் வரலாம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் மட்டுமே. இதனால், ஃபோக்ஸ்வாகன் - ஃபோர்டு இடையே எந்த வாகனப் பரிமாற்றமும் கிடையாது. 

Sponsored


இந்தியாவில், ஃபோக்ஸ்வாகனுக்கு பெரிய அளவு விற்பனை இல்லை என்பதால், தற்போது இந்தியாவுக்கு எந்தப் புதிய மாடல்களையும் கொண்டுவரப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறது ஃ போக்ஸ்வாகன். ஆதே சமயம், அதன் இன்னொரு பிராண்டான ஸ்கோடா மூலம் பல புதிய கார்களை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது. ஃபோர்டு நிறுவனம், சமீபத்தில் மஹிந்திராவுடன் இணைந்து சில எஸ்யூவி கார்களையும், ஆஸ்பயர் மாடலை அடிப்படையாகக்கொண்ட மின்சார வாகனத்தையும் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored