1537 வருடங்கள் பழமையான பாடல்களைப் பாடும் சிட்டுக் குருவிகள்..! ஆய்வில் தகவல்Sponsoredசிலர் தங்கள் மரபுகளைச் சில பத்தாண்டுகள் முன்பிருந்து குறிப்பிடுவார்கள். சிட்டுக்குருவிகள் தங்கள் மரபுகளைச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து குறிப்பிடுகின்றன. Nature Communications என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி சிட்டுக்குருவிகள் தம் குரலொலியால் பாடும் பாடல்கள் பல நூற்றாண்டுகளாக அவற்றால் பாதுகாக்கப்பட்டு, பரிமாற்றப்பட்டு இன்றுவரை இருந்துகொண்டிருக்கின்றன.

இந்த ஆய்விற்காக அமெரிக்காவின் 6 அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வாழும் சிட்டுக்குருவிகளின் குரலொலிகளைப் பதிவுசெய்தனர். அதில் பதிவுசெய்யப்பட்ட 615 குரலொலிகளில் 160 வகை மிகச்சிறிய உச்சரிப்பு வேறுபாடுகளைத் தவிர வேறு மாற்றங்கள் இல்லையென்று ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர். அதாவது தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் தழிம் மொழியின் பேச்சுவழக்கு ஊருக்கு ஊர் மாறுபடுவதைப்போல. அதே சமயம், 1970 முதல் இதுவரை சிட்டுக்குருவி தொடர்பான ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்ட அவற்றின் குரலொலிகளின் பதிவுகளையும் சேகரித்து தற்போதைய பதிவுகளோடு ஒப்பிட்டனர். அதிலும், எந்த மாற்றமும் இல்லாதிருந்தது அறிஞர்களுக்கு ஆச்சரியத்தையே தந்தது. இளம் சிட்டுக்கள் வளர்ந்த குருவிகளிடமிருந்து இந்தக் குரலொலிகளைத் தெரிந்துகொள்வதோடு அவற்றை அப்படியே விகடம் செய்யவும் கற்றுக்கொள்கின்றன. நூற்றாண்டுகள் மட்டுமில்லை, 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரலொலிகளைக் கொண்டவை சிட்டுக்குருவிகள் என்பது தொல்லுயிரிய ஆராச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. மிகப் பழமையான சிட்டுக்குருவியின் குரலொலிப் பாடல் 1537 வருடங்களுக்கு முன்னமிருந்து அவற்றால் பாடப்பட்டு வருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

Sponsored


Sponsored


"சிட்டுக்குருவிகள் மிகவும் அரிதாகவே கற்றுக்கொள்வதில் தவறிழைக்கின்றன. வழக்கமாக அவை, அரிதான பாடல்களைவிடப் பொதுவாக அனைத்து குருவிகளாலும் பாடப்படுவதையே கற்றுக்கொள்கின்றன. அதனால் சில பாடல்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும் அவற்றின் கலாச்சாரமாகவே அடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசேர்க்கப் படுகின்றன" என்கிறார் லண்டனின் ராணி மேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உயிரியலாளர், ராபர்ட் லாச்லன். இனிமேல் உலகிலேயே பழமையான கலாச்சாரம் பண்பாடு என்று மனிதர்கள் யாரும் மார்தட்டிக் கொள்ளமுடியாது. அதற்குத் தகுதியான சிட்டுக்குருவிகளே சிறிய க்றீச்... க்றீச்சோடு கட்ந்து செல்கின்றனவே!Trending Articles

Sponsored