`இன்று முதல் கார் ஓட்டலாம்!' - பெண்களுக்காக சவுதியில் முடிவுக்கு வந்த சட்டம்சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், கார் ஷோரூம்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகின்றனர். 

Sponsored


சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்ற கூடாது, விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் பார்க்க கூடாது போன்ற கடுமையான சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. அதேபோல், பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து 1990-ம் ஆண்டில் இருந்து உரிமைக்காகப் பெண்கள் போராடி வந்தனர். 

Sponsored


இதனிடையில், மன்னர் சலாமனின் இளைய மகனான முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக அண்மையில் பொறுப்பேற்றார். அதன்பிறகு, பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்டங்களில் தளர்வு செய்யப்பட்டது. அதன்படி, திரையரங்குகள் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறவும், கார் ஓட்டுவதற்கான அனுமதி அளித்து சவுதி அரசு உத்தரவிட்டது. இந்தமாத தொடக்கத்தில் பெண் வாகன ஓட்டிகளுக்கு, ஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடங்கப்பட்டது.

Sponsored


இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் என்னும் நகரில் இன்றுமுதல் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கியுள்ளனர். இதனால், பெண்களுக்கான சிறப்பு ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சவுதி இளவரசர்களில் ஒருவரான அல்வாலில் பின் தலால், தனது மகள் கார் ஓட்டும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். Trending Articles

Sponsored