சவுதியில் முதன்முதலாக ஃபார்முலா-1 கார் ஓட்டி அசத்திய பெண்!



சவுதி அரேபியாவில் கார் ஓட்ட அனுமதி வழங்கியதை அடுத்து, பெண் ஒருவர் ஃபார்முலா-1 பந்தய காரை ஓட்டி அசத்தியுள்ளார்.

Sponsored


Photo Credits : Twitter/Renault Sport F1‏

Sponsored


சவுதி அரேபியாவில், பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அசீல்-அல்ஹமத் என்ற பெண், எஃப்-1 காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார். சவுதி அரேபியாவின் தேசிய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பின் முதல் பெண்ணான அசீல், கார் ஓட்டுவதில் மிகவும் திறமையானவர். விரைவில், பிரான்சில் நடைபெற உள்ள கிராண்ட் பிரிக்ஸ் எஃப்-1 கார் பந்தயத்தை ஒட்டி, அங்கு பல முன்னணி கார் நிறுவனங்கள் கூடுகின்றன. 

Sponsored


இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு, அபுதாபியில் நடைபெற்ற கிராஸ்ட் பிரிக்ஸ் எஃப்-1 பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்று ரோனால்ட் நிறுவனத்துக்குப் பெருமை தேடித்தந்த எஃப்-1 காரை அசீல் ஓட்டி,அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இதுகுறித்துப் பேசிய அசீல், “மோட்டார் விளையாட்டுகள்மீது சிறு வயது முதலே மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தேன்.  எஃப்-1 கார் ஓட்டுவது எனது மிகப்பெரிய கனவு. தற்போது, அது நிஜமாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும், சவுதி அரசு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கிய நாளில் எஃப்-1 காரை ஓட்டியது மிகவும் பெருமையாக உள்ளது” எனக் கூறியுள்ளார். மேலும், இவர் சவுதியில் மோட்டார் விளையாட்டுகுறித்த விழிப்பு உணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Trending Articles

Sponsored