உவுசலா ஊதி ரொனால்டோவை உறங்க விடாமல் செய்த இரான் ரசிகர்கள்!Sponsoredலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் நேற்று முன்தினம் போர்ச்சுகல் அணி இரான் அணியுடன் மோதியது. அனல்பறந்த ஆட்டம் 1-1 டிராவில் முடிந்தது. ரொனால்டோ பெனால்டியைக் கோலாக மாற்றத் தவறினார். விளைவு... போர்ச்சுகல் அணியின் வெற்றி பறிபோனது. எனினும் 5 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த போர்ச்சுகல் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. வலுவான உருகுவே அணியை நாக் அவுட்டில் ரொனால்டோ அணி எதிர்கொள்கிறது. இரான் அணிக்கு எதிரான போட்டியின்போது, ரொனால்டோ மிகுந்த நெர்வஸாக இருந்தார். இரான் வீரர் மோர்டஸா முகத்தில் லேசான 'எல்போ' பிரயோகித்தற்காக ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டையும் காட்டப்பட்டது. பொதுவாக ' எல்போ ' பிரயோகித்தால் சிவப்பு அட்டை நிச்சயம். ஆனால், வீடியோ நடுவர்களுடன் ஆலோசித்து  ஃபவுல் வழங்கியதால் மஞ்சள் அட்டையோடு ரொனால்டோ தப்பினார்.  போர்ச்சுகல் கேப்டன் நெர்வஸாக இருந்ததற்கு  இரான் ரசிகர்கள்தான் காரணம். 

ஆட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு ரொனால்டோவை உறங்க விடாமல் இரான் ரசிகர்கள் செய்துள்ளனர். போட்டி நடந்த சரன்ஸ்க் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான இரான் ரசிகர்கள் போர்ச்சுகல் வீரர்கள் தங்கியிருந்த மெர்குர் ஹோட்டல் முன்னால் நின்று பெரும் கூச்சல் எழுப்பியுள்ளனர். ட்ரம்ஸ்களை அடித்து ஒலி எழுப்பியதோடு, உவுசலா ஊதியும் இரைச்சலை ஏற்படுத்தினர். இதனால் , ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த போர்ச்சுகல் அணி வீரரகள் உறங்க முடியாமல் தவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தன் அறையின் ஜன்னல் பக்கம் வந்த ரொனால்டோ தான் உறங்குவதாகவும் அமைதியாக இருக்குமாறும் செய்கை செய்தார். ஆனால், பலன் இல்லை. இரவு முழுவதும் சரியாக உறங்க முடியாத நிலையில் அடுத்த நாள் ஆட்டத்தில் ரொனால்டோ முழு திறமையை காட்ட முடியாத நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

Sponsored


இரான் ரசிகர்கள் போர்ச்சுகல் வீரர்களைத் தொந்தரவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored