முதலுதவி சிகிச்சை அளிக்கும் மோப்ப நாய்! - வைரலான காட்சிகள்Sponsoredஸ்பெயின் காவல்துறையில் உள்ள மோப்ப நாயின் அறிவாற்றல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. `மாரடைப்பு ஏற்பட்ட மனிதனுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்' என அந்த நாய் கற்றுக் கொடுக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட் நகரின் மாநகர சி.பி.ஆர் காவல்துறையில் போஜோ என்ற மோப்ப நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நாயின் உயிர் பாதுகாப்புத் திறனைக் கண்டு வியந்த போலீஸார், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். ட்விட்டரில் வெளியான அந்த வீடியோ 11,200 தடவை ரீ ட்வீட் செய்யப்பட்டு, சுமார் இரண்டு மில்லியன் மக்களைச் சென்று சேர்ந்துள்ளது.

Sponsored


அந்த வீடியோவில், சி.பி.ஆர் காவலர் ஒருவர் மயங்கி கீழே விழுகிறார். அவரைக் காப்பாற்ற, தனது முதுகில் நீல நிற சைரனை பொருத்திக் கொண்டு ஓடிவரும் போஜோ, காவலரின் நெஞ்சின் மீது குதித்து தனது காலால் அழுத்துகிறது. மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து, காவலரின் கழுத்தில் தனது தலையை வைத்து நாடித் துடிப்பை சோதனை செய்கிறது. 

Sponsored
Trending Articles

Sponsored