`யார் உனக்கு இந்தத் தைரியம் கொடுத்தது!’ - முத்தமிட வந்த ரசிகரை விளாசிய பெண் நிருபர் #FIFAலைவ்வில் பேசிக்கொண்டிருந்தபோது, தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட கால்பந்து ரசிகருக்குப் பெண் பத்திரிகையாளர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். 


 

Sponsored


உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின்போது ரசிகர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவேயில்லை. ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லைவ்வில் பேசிக்கொண்டிருந்த கொலம்பியா பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் திடீரென ஒருவர் முத்தமிட்டுச் சென்றார். அதுமட்டுமின்றி அந்தப் பெண் பத்திரிகையாளரைக் கட்டியணைத்து வன்கொடுமை செய்தார். இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்தது. `இது அநாகரிகத்தின் உச்சம்’ என்று அந்த நபரின் புகைப்படத்தைப் பகிர்ந்து இணையவாசிகள் கொந்தளித்தனர். அந்தப் பெண் பத்திரிகையாளர் லைவில் பேசிக்கொண்டிருக்கையில் இப்படி நடந்ததால், செய்வதறியாது லைவ்வில் பேசுவதைத் தொடர்ந்தார். அதன்பின் ட்விட்டரில் அந்த நபரை திட்டித்தீர்த்தார். பெண் பத்திரிகையாளர்களிடம் கால்பந்து ரசிகர்கள் பலர் அநாகரிகமாக நடந்துகொள்வதாகக் குறிப்பிட்டு வருந்தினார்.

இந்தச் சம்பவத்தின் பரபரப்பு குறையும் முன்னரே , மற்றொரு பெண் நிருபர் கால்பந்துப் போட்டியின்போது லைவ்வில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், கொலம்பியா பெண் நிருபரைப் போன்று இவர் செய்வதறியாது தவிக்கவில்லை. அந்த இடத்திலேயே அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிரேஸில் ஊடகம் ஒன்றின் பெண் நிருபரான ஜூலியா, நேற்று ஜப்பான், செனிகல் இடையேயான போட்டியின்போது லைவ்வில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கால்பந்து ரசிகர், அவரின் கன்னத்தில் முத்தமிட முயன்றார். அதிர்ச்சியடைந்த ஜூலியா, சுதாரித்துக்கொண்டு அந்த நபரைத் தள்ளிவிட்டு சரமாரியாகத் திட்டத் தொடங்கினார். `இது போன்று செய்யாதே. ஒருபோதும் இப்படிச் செய்யாதே. யார் உனக்கு இந்தத் தைரியத்தைக் கொடுத்தது. பெண்களை மதிக்கக் கற்றுக்கொள். இது கண்ணியம் கிடையாது. எந்தப் பெண்ணிடமும் இப்படி நடந்துகொள்ளாதே’ என்று விளாசினார். அந்த நபரும் மெல்லிய குரலில் மன்னிப்புக் கேட்டுவிட்டு கடந்துசென்றார். ஜூலியாவின் வீடியோ, இணையத்தில் செம வைரல். அவரின் துணிவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. உலகமே உற்றுப்பார்க்கும் கால்பந்து அரங்கத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற அநாகரிகச் செய்கைகளுக்கு என்னதான் தீர்வு? 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored