அமெரிக்காவில் உற்பத்தியை நிறுத்திய ஹார்லி டேவிட்சன்! - அதிர்ச்சியில் ட்ரம்ப்



அமெரிக்காவில் உள்ள தனது உற்பத்தி ஆலையை மூட உள்ளதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sponsored


அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிபரான பிறகு, மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகமாக வரி விதித்தார். இது, அனைத்து நாடுகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிக வரியை ரத்துசெய்ய வேண்டும் எனப் பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் ட்ரம்ப் அதை ஏற்கவில்லை. எனவே, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, ஐரோப்பா, கனடா, சீனா போன்ற நாடுகளும் ட்ரம்ப்புக்குப் போட்டியாக இறக்குமதி வரியை அதிகப்படுத்தின.

Sponsored


இந்நிலையில், அமரிக்காவை தலைமையிடமாகக்கொண்ட ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அங்கு தனது உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களைவிட ஸ்டீல் பொருள்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 

Sponsored


ஐரோப்பிய நாடுகளில் 6 சதவிகிதமாக இருந்த அமெரிக்க இறக்குமதி இருசக்கர வாகனங்களுக்கான வரி, தற்போது 31 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் உள்ள ஆலையில் தற்போது உற்பத்தியை நிறுத்திவிட்டு, மற்ற நாடுகளில் இருக்கும் ஆலையில் உற்பத்தியைத் தொடர உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள தங்களின் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய இதுவே சிறந்த வழியாக இருக்கும் என்றும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இருக்கும் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என தாங்கள் நம்புவதாகவும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கூறியுள்ளது. 

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , “ஹார்லி டேவிட்சன் முதன்முதலாக ஐரோப்பிய நாடுகளுக்கு வெள்ளைக்கொடி காட்டியுள்ளது பெரும் ஆச்சர்யமாக உள்ளது. நான் அவர்களுக்காகப் பெரிதும் போராடியுள்ளேன். சற்று பொறுமையாக இருப்பது நல்லது” எனப் பதிவிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், “ மற்ற நாடுகளில் கண்டிப்பாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தால் கால் பதிக்க முடியாது. அந்நிறுவனத்தின் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அவர்கள்மீது கடும் கோபத்தில் உள்ளனர். அமெரிக்காவை விட்டு அவர்கள் நகர்ந்தால், அது அந்நிறுவனத்தின் முடிவின் ஆரம்பமாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.



Trending Articles

Sponsored