அமெரிக்காவுக்குள் நுழைந்த இந்தியப் பெண்..! பிரிக்கப்பட்ட 5 வயது குழந்தைஅமெரிக்காவுக்குள் சட்டத்துக்குப் புறம்பாகத் தஞ்சம் புகுந்ததாகக் கூறி குஜராத்தைச் சேர்ந்த இந்தியப் பெண்ணிடமிருந்து, அவருடைய ஐந்து வயது மாற்றுத்திறனாளி குழந்தை தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

Sponsored


அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாகத் தஞ்சம் புகுபவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜிரோ டோலரன்ஸ்(சகிப்புத்தன்மை இல்லை) என்ற கொள்கையை அமல்படுத்தினார். அதன்படி, சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் நுழைபவர்களிடமிருந்து, அவர்களின் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படும். அந்தக் குழந்தைகள் தனியாகக் காப்பகங்களில் அடைத்துவைக்கப்பட்டு பராமரிக்கப்படும். அதேநேரம், பெரியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ட்ரம்பின் இந்தக் கொள்கை முடிவை அடுத்து, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பெற்றோர்களிடமிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரிக்கப்பட்டன. ட்ரம்ப்பின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்தன. உலக அரங்கிலும் பெரும் கண்டனங்கள் எழுந்தன.

Sponsored


அதனையடுத்து, அந்தக் கொள்கையைக் கொஞ்ச காலத்துக்கு நிறுத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்தநிலையில், `குஜராத்தைச் சேர்ந்த பாவன் பட்டேல் என்ற 33 வயதுப் பெண், அவரது ஐந்து வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மெக்ஸிகோ வழியாகச் சில நாள்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார். அந்தப் பெண்ணைக் கைது செய்த அமெரிக்கக் காவல்துறையினர், குழந்தையை அவரிடமிருந்து பிரித்து காப்பகத்தில் கொண்டு சேர்த்துள்ளனர். அமெரிக்க நீதிமன்றம் மூலம் பாவன் பட்டேல், அவரது குழந்தையுடன் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ட்ரம்பின் ஜீரோ டோலரன்ஸ் சட்டம் மூலம் இந்தியர் ஒருவர் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அதேநேரம், சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமெரிக்கச் சிறைச்சாலைகளில் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored