கறுப்புப் பணம் டெபாசிட் செய்த நாடுகள் பட்டியல் வெளியீடு! - முன்னேறிய இந்தியா



ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணத்தை அதிக அளவில் டெபாசிட் செய்த நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பிரிட்டன் முதலிடத்தையும், அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. 

Sponsored


உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துவருகின்றனர். அந்த வகையில், டெபாசிட் தொகையின் அடிப்படையில் நாடுகளின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுவருகிறது சுவிஸ் தேசிய வங்கி. இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில், 15 படி முன்னேறி 73-வது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் கறுப்புப் பணம் 50 சதவிகிதம் அதிகரித்ததால், பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது.

இந்தியாவைவிட அதிக அளவில் டெபாசிட் செய்த நாடுகள்:  சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இத்தாலி, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்டவை இடம் பிடித்துள்ளன. 

Sponsored


இந்தியாவைவிட குறைவான அளவில் டெபாசிட் செய்த நாடுகள்: மொரீஷியஸ், வங்கதேசம், இலங்கை,நேபாளம், வாடிகன் சிட்டி, ஆப்கானிஸ்தான்,  இராக், பூடான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Sponsored


ஸ்விஸ் தேசிய வங்கி, கடந்த 1996-2007 -ம் ஆண்டு வரை வெளியிட்ட பட்டியலில், தொடர்ச்சியாக முதல் 50 இடத்துக்குள் இந்தியா வந்தது. அதன்பிறகு, 2008-ம் ஆண்டில் 55-வது இடத்தையும், 2009-2010-ம் ஆண்டில் 59-வது இடத்திலும் இருந்தது. 2011-ம் ஆண்டில் 55-வது இடம், 2012-ம் ஆண்டில் 71-வது இடத்தையும் பிடித்து, படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஆனால், 2013-ம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் தொகை அதிகரித்து, 58-வது இடத்துக்கு முன்னேறியது. அதன்பிறகு, கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் தொகை குறையத் தொடங்கியது. இருப்பினும், 2017-ம் ஆண்டில் 7,000 கோடி ரூபாய் அளவில் இந்தியர்களின் டெபாசிட் உயர்ந்துள்ளது. இதனால், தர வரிசைப் பட்டியலிலும் இந்தியா முன்னேறியுள்ளது.
 



Trending Articles

Sponsored