விஷம் கலந்த தண்ணீரைக் குடித்த 60 மாணவிகள்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சைSponsoredஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளி மாணவிகள் கால்வாய் நீரை குடித்ததால் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாணம், ஜபாலஸ் சராஜ் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு நேற்று, அருகில் உள்ள கால்வாயில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதை அருந்திய 100 மாணவிகளில் 60 பேர் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 10 மற்றும் 11-ம் வகுப்பு படிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அருந்திய நீரை சோதனை செய்து பார்க்கும்போது அதில் கடினமான விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


இதுகுறித்து பர்வான் மாகாண கல்வி அதிகாரி கூறும்போது, ‘மயக்கமடைந்த மாணவிகள் அனைவரும் மாகாண தலைநகரான சரிகாருக்கு சிகிக்கைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.’என தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் பெண் குழந்தைகளின் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பர்வான் மாகாணம் முழுவதும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored