‘எங்கள் நாட்டு மேகங்களைத் திருடிவிட்டது’- இஸ்ரேல் மீது இரான் பகீர் குற்றச்சாட்டு



இரான் நாட்டு மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடிவிட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை இயக்குநர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Sponsored



இரான்  தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரி கோலம் ரெஸா ஜலாலி பேசும்போது, ‘இஸ்ரேல் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள், இரானுக்குள் நுழைந்து இங்குள்ள மேகக்கூட்டங்களைத் திருடிச் செல்வதால்தான், நம் நாட்டில் அதிக வறட்சி நிலவுகிறது. மேகங்கள் மற்றும் உறைபனி திருடப்படுவது தொடர்பாக நாங்கள் பல வழக்குகளைச் சந்தித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக மற்ற நாடுகளின் பெயர்களை ஜலாலி குறிப்பிடவில்லை. ஆனால், மேகக்கூட்டங்களின் திருடலில் வெளிநாட்டின் குறுக்கீடு இருப்பதைத்  தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Sponsored


இவரின் கருத்தை இரான் வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநர் ஆஹாத் வசிஃப் கூறுகையில், ‘வானிலையில் நான் அறிந்திராத பல விஷயங்கள் உள்ளன. ஆனால், எனக்குத் தெரிந்த வானிலை அறிவின்மூலம் கூறுகிறேன், மேகங்களைத் திருடுவது என்பது சாத்தியமற்றது” என்று தெரிவித்துள்ளார். 

Sponsored


இரானில் வறட்சி தொடர்பாகக் குறைகூறுவது என்பது புதிதல்ல. கடந்த 2011-ம் ஆண்டு, அந்நாட்டு அதிபர் மஹ்முத் அஹ்மதிநெஜாட் , இரானின் வறட்சிக்கு மேற்கு நாடுகளே காரணம் என்றும், மேகங்களை அழித்துவிட்டு எதிரிகள் நம் நாட்டுக்குள் வருகிறார்கள் என்றும் பேசியுள்ளார்.



Trending Articles

Sponsored