சைவ உணவுக் கட்டுப்பாடு - பின்வாங்கியது எமிரேட்ஸ்Sponsoredதுபாயைச் சேர்ந்த 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' நிறுவனம்,  தங்களது விமானங்களில் வழங்கப்பட்டுவந்த 'ஹிந்து  மீல்ஸ்' என்று அழைக்கப்படும் சைவ உணவுகளை ரத்துசெய்திருந்தது. வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தநிலையில் அந்த முடிவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்திருக்கிறது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயைச் சேர்ந்த 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' நிறுவனம் இதற்கு முன்  வெளியிட்ட அறிக்கையில், "வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இதுவரை வழங்கப்பட்டுவந்த 'ஹிந்து மீல்ஸ்'  எனப்படும் சைவ உணவுகளில் சிலவற்றை ரத்துசெய்வதாக முடிவெடுத்திருக்கிறோம். மாறாக, ஜெயின் சமூகத்தவர் உண்ணும் சைவ உணவு, மாட்டிறைச்சி கலக்காத அசைவ உணவு ஆகியவற்றை இந்தியர்கள் சாப்பிடலாம்" என்று அறிவித்திருந்தது. 

Sponsored


எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து, அந்த நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில்  'ஹிந்து மீல்ஸ்' சேவையை மீண்டும் தொடர்வதாக இருக்கிறோம்" என்று அறிவித்திருக்கிறார்கள்.  எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored