சுதந்திரதேவி சிலைமீது ஏறி போராடிய பெண் - திணறிய அமெரிக்க காவல்துறை!Sponsoredஅமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலைமீது ஏறி, ஒரு பெண் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பல நாடுகளில் இருந்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் தஞ்சம் புகும் அகதிகளிடமிருந்து அவர்களின் குழந்தைகள் பிரிக்கப்பட்டு, தனியாக ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்ட சம்பவத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை,  உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு  எதிராக ட்ரம்ப்பின் மனைவி மெலானியாவும் போர்க்கொடி தூக்கினார். பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.குழந்தைகள் பிரித்துவைக்கப்பட்டதுக்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, ட்ரம்ப் தனது நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். 

Sponsored


Sponsored


 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ளது லிபர்டி தீவு. இந்த தீவில்தான் பிரமாண்ட சுதந்திரதேவி சிலை அமைந்துள்ளது. அந்தச் சிலையின் அடிப்பகுதி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கபடுவர். இந்நிலையில், நேற்று ஒரு பெண் அகதிகளின் குழந்தைகளைப் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, சுதந்திரதேவி சிலையின்மீது அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தெரேஸ் பாட்ரிசியா என்ற பெண், சுதந்திரதேவி சிலையைப் பார்வையிடுவதுபோல சென்று, சிலையின் மேலே ஏறி, சுதந்திரதேவியின் உடை மடிப்பில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.  தகவல் அறிந்து சம்பவ இட்டதுக்கு வந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணை பிடிக்க முயன்றுள்ளனர்.  பெற்றோர்களிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டுள்ள குழந்தைகள் அனைவரையும் விடுதலைசெய்யும் வரை தான் இறங்கப்போவதில்லை எனத் தெரிவித்து, போலீஸின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்துள்ளார்.  சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, போலீஸார் அந்தப் பெண்ணைப் பிடித்து கைதுசெய்தனர். தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. சுமார் 300 அடி உயரம் கொண்ட  சிலை மீது அமர்ந்து, அவர் போராட்டம் நடத்தினார்  என்பது குறிப்பிடத்தக்கது. 
 Trending Articles

Sponsored