மூழ்கிய படகின் மீது அடுத்தடுத்து ஏறிய பயணிகள்! - இந்தோனேசியா விபத்தின் அதிர்ச்சிக் காட்சிகள்Sponsoredஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்த விபத்தின் அதிர்ச்சிகர வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருக்கிறது. `படகில் அதிகப்படியான மக்களோடு கார் உள்ளிட்ட வாகனங்களும் ஏற்றப்பட்டிருந்தன. அதிக பாரமும், மோசமான வானிலையும்தான் விபத்துக்கு காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவுகளுக்குப் பெயர் போன இந்தோனேசியாவில் படகுப் போக்குவரத்தையே அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த  ஜூலை 3-ம் தேதியன்று சுலாவசி தீவிலிருந்து 189 பயணிகளுடன் செலயார் தீவை நோக்கி, ஒரு படகு சென்றுகொண்டிருந்தது. படகுத் துறையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருக்கும்போது மோசமான வானிலை காரணமாக அந்தப் படகு மெதுவாக மூழ்கத் தொடங்கியது. இந்த விபத்தில் இதுவரையில் 34 பேர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. படகில் சென்ற பயணிகள் அனைவரும் லைஃப் ஜாக்கெட்டைப் பயன்படுத்தி இருந்ததால், பலரும் உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

Sponsored


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தோனேசியா பேரிடர் மேலாண்மைக் குழு செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ, ‘ படகு அபாய நிலையில் உள்ளது என்பதை உணர்ந்த கேப்டன் உடனடியாக அருகில் உள்ள செலாயர்  தீவை நோக்கிப் படகை திருப்பியிருக்கிறார். மக்களைக் காப்பாற்றுவதிலேயே அவர் முழுக் கவனமும் செலுத்தினார். அவரின் நடவடிக்கையால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன’ என்றார். படகு விபத்து நடந்தபோது அதில் அளவுக்கு அதிகமான மக்கள் இருந்துள்ளனர். மேலும், அந்தப் படகில் கார் உள்ளிட்ட வாகனங்களும் இருந்துள்ளன. இந்த விபத்து நடைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. படகு மெதுவாகக் கடலில் மூழ்குவதும் பலர் அதன் மீது ஏறி தப்பிக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தில் காப்பாற்றப்பட்டவர்கள், அருகில் உள்ள ரப்பர் படகில் பதற்றத்துடன் இருப்பதுபோன்ற காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. 

Sponsored
Trending Articles

Sponsored