விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் அதிரடி உத்தரவு!Sponsoredபிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா, நிதி நெருக்கடியில் சிக்கி தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உட்பட பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து சுமார் ஒன்பது ஆயிரம் கோடி அளவில் கடன் பெற்றார். இந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2015-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்தார். வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கியைக் கட்டாயம் அவர் திரும்பிச் செலுத்த வேண்டும் என்று கடன் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் மல்லையாவின் கடன் பாக்கித் தொகையை வசூலிக்க கடன் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுப்படி 13 இந்திய வங்கிகள் இங்கிலாந்து ஐகோர்ட் வணிகக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை முடிவில் பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவின் மூலம் இங்கிலாந்தில் இருக்கும் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் இங்கிலாந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கவிருக்கிறார்கள். 

Sponsored


இதற்கு முன்னதாக, கடந்த மே மாதம் மல்லையாவுக்குச் சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored