தாய்லாந்துக் குகையில் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் கொண்டுசென்ற மீட்பு வீரர் பலி #Thailandcaverescue



Sponsored



தாய்லாந்து நாட்டில், 12 இளம் கால்பந்து வீரர்கள் உட்பட 13 பேருக்கு ஆக்சிஜன் சப்ளை செய்துவிட்டுத் திரும்பிய  முன்னாள் சீல் டைவர் வீரர், ஆக்சிஜன் இல்லாமல் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தாய்லாந்தில், கடந்த ஜூன் 23-ம் தேதி, பள்ளி கால்பந்து அணி ஒன்று தனது பயிற்சியாளருடன் வடக்கு தாய்லாந்துப் பகுதியில் உள்ளது தி தம் லுஅங் குகைக்குள்  சென்றனர். அப்போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், அவர்கள் 13 பேரும் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 9 நாள் தேடுதலுக்குப் பின்னர் 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளர்களுடன் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகையில் இன்னும் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால், அவர்களைக் குகையிலிருந்து மீட்க முடியவில்லை. தண்ணீருக்குள் டைவ் அடித்துச் செல்லும் வீரர்கள் உள்ளே  தேவையான பொருள்களை சப்ளை செய்துவருகின்றனர். இந்த மீட்புப் பணியில், தாய்லாந்து மீட்புப் பணியினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 மீட்புப் படையினர் பங்கேற்றனர்.  

Sponsored


Sponsored


உள்ளே இருக்கும் 13 பேரையும் மீட்க இன்னும் சில காலம் ஆகும் என்ற நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மாயமான சிறுவர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கிவிட்டுத்  திருப்பி வந்துகொண்டிருந்த முன்னாள் சீல் டைவர் வீரரான சமன் குனான் (38), போதிய ஆக்சிஜன் இல்லாததால் நினைவிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்ற மீட்பு வீரர்களால் அவரை மீட்க முடியவில்லை. 

இது தொடர்பாக அந்தப்  பகுதியின் ஆளுநர் கூறுகையில், “மாயமான சிறுவர்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்வதுதான் அந்த முன்னாள் சீல் டைவருக்கு கொடுக்கப்பட்ட பணி.  அவர் உள்ளே சென்றுவிட்டுத்  திரும்பும்போது, போதிய ஆக்சிஜன் இல்லாமல் இறந்துள்ளார்” என்றார். இந்தச்  சம்பவம், நள்ளிரவு 2 மணியளவில் நடந்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள்  நடைபெற்று வருவதால், உள்ளே ஆக்சிஜனின் அளவு குறைவாக  உள்ளது. உள்ளே இருக்கும் இளம் கால்பந்து வீரர்களுக்கு ஆக்சிஜன் குறைவாக உள்ளது என்பதால், அவர்களுக்கும் ஆக்சிஜன் வழங்கப்பட்டுவருகிறது. 

கடந்த இரண்டு வாரங்களாக இளம் கால்பந்து வீரர்கள் உள்ளே இருப்பதால், அவர்களைத்  தண்ணீரில் அழைத்துவருவதில் சிக்கல் நீடிக்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சிறுவர்களை வெளியே கொண்டுவர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், சிறுவர்களின் உறவினர்கள் வெளியில் காத்திருக்கின்றனர். உள்ளே சிறுவர்களுடன் எடுக்கப்பட்ட வீடியோக்கள், சிறுவர்களின் உறவினர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. 



Trending Articles

Sponsored