`அடிப்படை சுகாதாரம்தான் இலக்கு!' - பாகிஸ்தான் தேர்தலில் அசத்தும் இந்துப் பெண்Sponsoredபாகிஸ்தானில் முதல்முறையாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர், மாகாண சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். 

Photo Credit: Facebook.com/Sunitaparmar

Sponsored


பாகிஸ்தான், தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள சிந்து சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சுனிதா பர்மார். இவர் மேக்வார் சமூகத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த சிறுபான்மை சமூகப் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சுனிதா கூறுகையில், `முந்தைய அரசாங்கம் சிந்து தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. 

Sponsored


அடிப்படை சுகாதாரம், பெண்களுக்கென முறையான கல்வி நிறுவனங்கள் என எதுவும் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. பெண்கள் பலவீனமானவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் இருந்து வந்த நிலைமை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இது 21-ம் நூற்றாண்டாகும். நாங்கள் சிங்கத்துடன் போராடத் தயாராக உள்ளோம். பெண் கல்வியை நான் நம்புகிறேன்; பெண்களை வலிமையாகவும் செழிப்புறச் செய்வது கல்வி மட்டும்தான்' என்றார். இதேபோன்று, கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலினப் பெண் கிருஷ்ணகுமாரி கோலி, செனட் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். Trending Articles

Sponsored