உலக செல்வந்தர் பட்டியலில் டெக் சாம்ராஜ்யம்! - முன்னேறிய மார்க் சக்கர்பெர்க்



உலக பணக்காரர்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

Sponsored


உலக பணக்காரர்கள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று ப்ளூர்பெர்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 'உலக பணக்காரர்களில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். வாரன் பஃப்பெட்டை பின்னுக்குத் தள்ளி, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Sponsored


மார்க் சக்கர்பெர்க்கின் மொத்த சொத்து மதிப்பு 81.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி 5.61 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பஃப்பெட்டைவிட சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 2,565 கோடி ரூபாயாகும். முதல்முறையாக தொழில்நுட்பத்தைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. 

Sponsored




Trending Articles

Sponsored