`நான் கண்ணியம் தவறியதில்லை!' - ஜஸ்டீன் ட்ரூடோ விளக்கம்கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Sponsored


கனடா பிரதமராக ஜஸ்டீன் ட்ரூடோ பதவியேற்ற பிறகு, பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்துவருகிறார். அவரது அமைச்சரவையில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு அளித்தார். உலகளாவிய பார்வையிலும் ஜஸ்டீனுக்கு ஒரு நன்மதிப்பு உள்ளது. இந்நிலையில், அவரது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. இது, கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored


கடந்த 2000-ம் ஆண்டு, இவரது தந்தை பியேர் ட்ரூடோ  பிரதமராக இருந்த காலகட்டத்தில், பொது நிகழ்ச்சி ஒன்றில் ஜஸ்டின் கலந்துகொண்டார். அப்போது, ஒரு பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தது.கிறிஸ்டன் வேலி அட்வான்ஸ் என்ற பத்திரிகை இதுகுறித்து எழுதியது. வேறு எதிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகவில்லை. 18 வருடங்களுக்குப் பின் அந்தப் பெண் பத்திரிகையாளர், தற்போது அந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, “ 20 வருடங்கள் பழமையான சம்பவத்தை திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துகிறேன். அந்தப் பெண்ணிடன் நான் தவறாக நடந்துகொள்ளவில்லை. அதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ எனத் தெரிவித்தார். Trending Articles

Sponsored